விளையாட்டு

நியூஸிலாந்து – இந்தியா: முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

(UTV|நியூஸிலாந்து) – நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று(24) இடம்பெற உள்ளது.

ஐந்து இருபதுக்கு-20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இன்றைய போட்டி, நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 12.20க்கு இடம்பெற உள்ளது.

Related posts

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே – இந்திய மருத்துவ நிபுணர்

தென்னாப்பிரிக்கா நோக்கி பயணித்த இலங்கை அணி

இலங்கை Vs இங்கிலாந்து: போட்டி அட்டவணை