உள்நாடு

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைது

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பெண்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடவுச்சீட்டு வரிசை மேலும் நீடிக்கலாம் | வீடியோ

editor

திடீர் உடல்நலக்குறைவு – பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நபர்

editor

நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழகக் கல்வியை பயன்படுத்தும் திட்டம் – ரணில் விக்ரமசிங்க.