உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

(UTV|கல்முனை) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேரை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டி – ரிஷாட் பதியுதீன்

editor

 தங்கத்தின் இன்றைய நிலவரம்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor