உள்நாடு

முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னர் நீதிமன்ற உத்தரவின்படி 35 மாணவர்கள் மாத்திரமே முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நீதிமன்றத்தின் முடிவை மறுஆய்வு செய்வதற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்துவதற்கும், உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெற கல்வி அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

‘கருப்பு பூஞ்சை’ தொற்று இலங்கையில் அடையாளம் காணப்படவில்லை

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

editor

நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு!