உள்நாடு

இன்றிலிருந்து மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று(20) முதல் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டின் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு, ஊவா, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை மற்றம் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கு அதிரடி வெற்றி

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்