உலகம்

சீன அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பேஸ்புக்

(UTV|கொழும்பு) – தங்கள் இணையதளத்தில் சீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் பர்மிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆபாசமான பொருள் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று ஷி ஜின்பிங், மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூச்சி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு பற்றிய பர்மிய அரசின் ஃபேஸ்புக் பதிவில் ஷியின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இந்த தவறான மொழிபெயர்ப்புக்கு, “தொழிநுட்ப பிரச்சனையே” காரணம் என்று தெரிவித்துள்ளது.

இது இனியும் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்” என்று ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

Related posts

உலக அளவில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

editor

காசாவை கட்டியெழுப்பும் 53 பில். டொலர் திட்டத்திற்கு அரபுத் தலைவர்கள் இணக்கம்

editor