உள்நாடுசூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

(UTV|கொழும்பு)- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன எஸ்.பி.திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு நேற்று கூடியது

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேயமுனி சொய்சா தொடர்பாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு தெரிவித்துள்ளது.

Related posts

கிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம்

பலஸ்தீன விடுதலைக்காகவும் காஸாவின் வெற்றிக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இம்ரான் எம்.பி

editor

குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்