உள்நாடு

போதைபொருட்களுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு குற்றவியல் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரேன்பாஸ் பகுதியில் 05 கிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, பழைய விமான நிலைய வீதி சந்தியில் 05 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், இரத்மலானை பிரதேசத்தில் 02 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், மாளிகாகந்த, கல்கிஸ்ஸ மற்றும் மொரடுவை நீதவான் நீதிமன்றங்களில் இன்று (17) முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

இலங்கையில்: 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்

குருந்தூர்மலை வழக்கு – கைது செய்யப்பட்டவர்களளுக்கு பெப்ரவரி தவணை.

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு