உள்நாடு

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை டுபாயில் இருந்து நாட்டுக்கு கொண்டு வந்த இலங்கை பிரஜை ஒருவரை விமான நிலைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை இன்று (17) அதிகாலை கைது செய்தாக விமான நிலைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 650,000 ரூபா பெறுமதியான 10,800 வெளிநாட்டு சிகரெட்டுகளை விமான நிலைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்

சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

களனி கங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ

பிரதமருடன் P.H.I சங்கத்தினர் கலந்துரையாடல்