(UTV|ரஷ்யா )- ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev), தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி விளாடிமிர் புதினிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி புதின், மெத்வதேவ் சேவையை பாராட்டினார். மேலும், புதிய அமைச்சரவை அமைக்கும் வரை மெத்வதேவ் அமைச்சரவையை தொடர்ந்து செயல்பட வேண்டும் என அமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
