உள்நாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு

(UTV|ஐரோப்பா) – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை நேற்று(13) புதுப்பித்துள்ளது.

அதற்கமைய 15 தனிநபர்கள் மற்றும் 21 அமைப்புகளை தொடர்ந்தும் தனது பயங்கரவாத தடைப் பட்டியலில் உள்ளடக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நிதி மற்றும் சொத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்படுவதோடு, அவை முடக்கப்படும்.

2006ஆம் ஆண்டு இந்த அமைப்பு முதன் முதலில் தடைசெய்யப்பட்டதுடன், இன்று வரை இந்த அமைப்பு தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய சபை 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதியன்று பயங்கரவாதத்தை தடை செய்வதற்கான சட்ட வரைபொன்றை உருவாக்கியது.

வருடத்துக்கு இரண்டு தடவைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சபையினால் இப்பட்டியல் மீளாய்வு செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2026 வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள் – தமிழில் ஒரே பார்வையில்

editor

CID போல் நடித்து பண மோசடி – கைதான நபருக்கு விளக்கமறியல்

editor

மாணவர்கள் சுகவீனமடைந்த காரணத்தினால் மூடப்பட்ட பாடசாலை!