உள்நாடு

ஸ்ரீ.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV|கொழும்பு) – கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான தீர்மானம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்ததன் பின்னர் அறிவிக்கப்படும் என பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவிக்கின்றார்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டவர்கள் மீதே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”

கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் ஒருவர் கைது!

editor

இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்ட தகவல்

editor