உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

(UTV|கொழும்பு) -இந்த வருடத்தின் இறுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 6 ஆயிரம் பேருந்துகள் காணப்படுவதாகவும் அதில் 2 ஆயிரம் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் காணப்படுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் 36 முதல் 56 வரையிலான ஆசனங்களை கொண்ட 400 பேருந்துகளையும் 26 ஆசனங்களை கொண்ட 100 பேருந்துகளையும் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

திங்கள் முதல் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்