உலகம்

விபத்துக்குள்ளான விமானம் – கருப்பு பெட்டியை தர மறுக்கும் ஈரான்

(UTV|ஈரான்)- ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நேற்று விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான போயிங் அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இரான் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானத்தில் 176 பயணிகளுடன் பயணித்த உடனே இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 167 பயணிகளும் ஒன்பது விமானப் பணியாளர்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய விமானப் போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த இரானுக்கு உரிமை உண்டு.

இதுபோன்ற விசாரணைகளில் அந்த விமானத்தை தயாரித்த நிறுவனமும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் திறன் பெற்ற சில நாடுகளும் ஈடுபடுவது வழக்கமானது.

இந்நிலையில், “விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நாங்கள் அதன் உற்பத்தியாளரிடமோ அல்லது அமெரிக்கர்களிடமோ கொடுக்கமாட்டோம்” என்று இரானின் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அழைப்பு

BREAKING NEWS – தனது மக்களை பாதுகாக்க வான்வெளியை மூடிய கத்தார்

editor

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் காலமானார்!