உள்நாடு

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹம்மட் இம்ரான் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைபடுத்த போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதன் பின்னர், குறித்த சந்தேகநபரை விடுவிக்குமாறு துபாயில் இருந்து கஞ்சிப்பானை இம்ரான் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 3,000 ரூபாய் வவுச்சர்

editor

காட்டு யானைகளை விரட்ட GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டி

editor

கொவிட் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு