உள்நாடு

கோப் குழு – புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO) – கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(07) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துலையாடலுக்கு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி தெரிவுக்குழு, அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழு உள்ளிட்ட தெரிவுக் குழுக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய இணக்கப்பாட்டை எட்டுவதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

Related posts

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023

கோட்டாபய – ரணில் இடையே கலந்துரையாடல்

டீசல் தாங்கிய கப்பல் நாட்டுக்கு