உள்நாடுசூடான செய்திகள் 1

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி

(UTV|COLOMBO)- 13ஆவது திருத்தச் சட்டத்தின் சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு அதற்குப் பதிலாக அரசியல்வாதிகள் மாற்றுத் தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருடன் நேற்று (06) இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது, இலங்கையை முதலீட்டுக்கான ஒரு மையம் என்ற வகையில் சாதகமாக அணுகுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை போன்ற சிறிய நாடுகள் ஏனைய நாடுகளுக்கு ஈடாக அபிவிருத்தி அடையும் வகையில் உதவுவது, பிராந்திய மேலாதிக்கத்தை முறியடிப்பதற்கான சிறந்த வழி என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டபோது, ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில், 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறை சாத்தியமற்றதென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமனம்

அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறையவில்லை

வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பிரசன்ன ரணதுங்க பதில்.