உள்நாடுசூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் விளக்கமறியலை நீடித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர்கள் இருவரையும் 22ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு இன்று (06) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் சந்தை நிலைமை குறித்து நாணய நிதியம்

பழுதடைந்த பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

editor

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்