கேளிக்கை

அஜித், அனிகா ஒன்றிணைந்து தயாராகும் ‘வலிமை’

(UTV | INDIA) – நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

படத்தில் அஜித், அனிகா இருப்பது தான் உறுதியாக தெரியும். ஆனால் வில்லன் யார், ஹீரோயின் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் கார்த்தியின் மெட்ராஸ், தனுஷின் வட சென்னை படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவரும், வி1 மர்டர் கேஸ் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவருமான பாவெல் நவகீதன் வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஜெயம் ரவி, சிம்பு திரைப்படங்களின் வசூல் விவரம்

கொரோனா நிவாரண நிதிக்காக நிர்வாணப் புகைப்படம் ஏலத்தில்

ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்