உலகம்

இந்தியா – டில்லி தீ விபத்தில் 35 பேர் பலி

(UTV|COLOMBO) – இந்தியாவின் டில்லி தலைநகர் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜான்சி ராணி சாலையில் அமைந்துள்ள தனாஜ் மண்டியில் இன்று(08) அதிகாலை பயங்கர தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினர் சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வீடியோ | 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

editor

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

மத நிகழ்ச்சியொன்றில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- மதபோதகர் தலைமறைவு