சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொடை நுழைவாயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வீதி சீர்த்திருத்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த விபத்தில் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை பழுது பாரத்துக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுத்துறை-நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எதிர்வரும் 5ம் திகதி முதல் நாட்டினுள் மழை அல்லது காற்றின் வேகம் அதிகரிக்கலாம்….

பரீட்சை முறைக்கேடுகளை தடுக்க விசேட நடவடிக்கை-பரீட்சைகள் திணைக்களம்

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்