சூடான செய்திகள் 1

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 70 அடி 6 அங்குலம் உயரத்தில் நீரின் கனஅளவு காணப்படுவதால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

லக்ஷமன் கதிர்காமர் கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்