சூடான செய்திகள் 1

ஓய்வுபெற்ற பின்னரும் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ இல்லம் – அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற்றதன் பின்னரும் கொழும்பு – 7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை அவருக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று(15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த குறிப்பாணைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு அரசியலமைப்புக்கு அமைவாக வழங்கப்படும் சலுகைகளுக்கு மேலதிகமாக மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையை ஈடுபடுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Related posts

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

மழையுடனான வானிலை

சாரதிகள், நடத்துனர்கள் மதுபாவனையில் ஈடுபடுகின்றனரா? பரிசோதிக்க நடவடிக்கை