சூடான செய்திகள் 1

தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வு பெற்ற அல்லது மதகுருமார்களுக்கான அடையாள அட்டைகள் இல்லாத நபர்கள் குறித்த தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன் கிராம சேவகர் மூலம் குறித்த தற்காலிக அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்களை சமர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

உடவலவை நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு..

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன

தொடரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு