வகைப்படுத்தப்படாத

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – ஒரு இலட்சம்பேர் வெளியேற்றம்

(UTV|COLOMBO) – கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளதுடன், இதுவரை 7 ஆயிரத்து 542 ஏக்கர் நிலப்பரப்பு சாம்பலாகி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயை அணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Eight trains cancelled due to maintenance work

கொக்கிளாய் சிங்கள பாடசாலையில் வெடிப்பு!

ஹெரோயினுடன் இளைஞர் கைது