வகைப்படுத்தப்படாத

ஹகிபிஸ் புயல் – 8 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹகிபிஸ் புயலுக்கு தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டதுடன், இலட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் புயலின் எதிரொலியாக கடும் மழையால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

புயல் தொடர்பான எச்சரிக்கையால் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், பல்வேறு நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹிகிபிஸ் புயலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தளனர்.

Related posts

Rains expected in several areas today

வீதியில் நடமாடும் மன நோயாளர்களுக்காக புதிய நலன்புரி திட்டம்

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு