சூடான செய்திகள் 1

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர் பணி நீக்கம்

(UTVNEWS|COLOMBO) – கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாக குற்றப்பிரிவு மற்றும் நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்து போலி தகவல்கள் மற்றும் உறுதிப் படுத்த முடியாத தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளில் தெரியவந்த விடங்களுக்கு அமைய பொய்யான தகவல்கள் அடங்கிய கடிதத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்படும் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஸ்ரீ சுதந்திரக் கட்சி ஆதரவு [VIDEO]