வகைப்படுத்தப்படாத

துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – துனிசியாவில் அகதிகள் 50 பேருடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 பெண்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு அங்குள்ள லம்பேடுசா தீவை அண்மித்த போது, மோசமான காலநிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், 22 பேரை மீட்டனர். மேலும் உயிரிழந்த 13 பெண்களின் சடலமும் மீட்கப்பட்டது.

இந்த ஆண்டில் இதுவரை மத்தியதரைக் கடலில் இது போன்ற விபத்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ගෝඨාභයගේ නඩුව අත්හිටුවන්නැයි නියෝගයක්

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் டிரம்ப்

Boris Johnson to be UK’s next prime minister