சூடான செய்திகள் 1

வேட்பாளராக சஜித்தை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிக்கிறேன் – ரணில்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே குறித்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வேட்பாளராக சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிப்பதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது அறிவித்திருந்தார்.

Related posts

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!

மின்சார துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை இதோ…

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம் காப்பது ஏன்??? கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி.