சூடான செய்திகள் 1

03 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – இன்று(03) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ​தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிலவும் மழையுடனான காலநிலை காராணமாக மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்குக் காய்ச்சலால் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 607 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மாளிகாவத்தை குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியது

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டி.மஞ்சு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி