விளையாட்டு

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 போட்டித் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related posts

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்

டிக்கெட் விற்பனை: SLC தனது முக்கிய தீர்மானங்களை அறிவித்தது