வகைப்படுத்தப்படாத

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா

(UTVNEWS|COLOMBO) – சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் ‘சீன மக்கள் குடியரசு’ தோற்றுவிக்கப்பட்டதன் 70ம் ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதற்காக பல தசாப்பதங்கள் இல்லாத அளவுக்கு பெருமளவு கொண்டாட்டங்கள் சீனாவில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த கொண்டாட்டங்கள் சுமூகமாக, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுவதற்காக, நாட்டிலும், தலைநகர் பெய்ஜிங்கிலும் பல வாரங்களாக பாதுகாப்பை பலப்படுத்தி, இணையதளத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சீனாவின் மாபெரும் தலைவராக கருதப்படும் மா சேதுங் 70 ஆண்டுகளுக்கு முன்னால், (01.10.1949) நவீன சீனா உருவாவதாக அறிவித்த நாள் இன்று.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, ‘சேர்மன்’ மா சேதுங் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்ற பின்னர் இந்த அறிவிப்பு வந்தது.

இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டுவந்தாலும், 70வது ஆண்டுவிழா பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Light showers expected in several areas today

ஜனாதிபதி நாளை ரஷ்யா விஜயம்