சூடான செய்திகள் 1

மாத்தறை, கிரிந்த வன்முறை – 04 பொலிசார் பணி இடைநிறுத்தம்

(UTVNEWS|COLOMBO) – மாத்தறை, கிரிந்த பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க தவறியமை, கடமைகளை சரிவர செய்யாமை, சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஹக்மன பொலிஸ் நிலையத்தின் 4 பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு