வகைப்படுத்தப்படாத

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பீகார் மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீகார், பாட்னாவில் 200 மிமீ வரை கடும் மழை பெய்துள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் மட்டும் 26 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி விமானப்படைக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் நாடு முழுவதும் மழை தொடர்பான விபத்துக்களில் 110 பேர் உயிரிழந்துள்ளதுடன், உத்தர பிரதேசத்தில் மட்டும் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை

Mathews magic sees Lanka home in nail-biter against West Indies

ஜூலியன் அசாஞ்சே கைது…