சூடான செய்திகள் 1

மைத்திரியை சந்திக்கவுள்ள ராஜபக்ஸவினர்

 (UTVNEWS|COLOMBO) – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று இரவு இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக
தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ´சின்னம்´ தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor