சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் 200 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வலிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 200மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

புதிய கடற்படை பேச்சாளர் நியமனம்

தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்