சூடான செய்திகள் 1

கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நில்வளா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில மாகாணங்களில் இன்று இரவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு பூட்டு

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு