சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் வாகன போக்குவரத்து மட்டு

(UTVNEWS|COLOMBO) – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த லூசியா வீதியில் போங்ஜியன் ஒழுங்கை முதல் ஆறாவது ஒழுங்கை வரையிலான வீதியில் நாளை(20) முதல் போக்குவரத்து மட்டுபடுத்தபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீர்க் குழாய் திருத்தப்பணிகள் காரணமாக நாளை(20) இரவு 10 மணி முதல் 23ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மற்றும் 27 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுபடுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

48 மணித்தியாலத்தில் 700 பேர் கைது…

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்