சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று(19) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பமாகிறது…