சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்று(17) இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 10.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.

பதிவுசெய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

வியாழேந்திரனின் கோட்டாவுக்கு ஆதரவு

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்