சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயா் நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO)- பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீடு சிசிர த ஆப்ரூ, பிரியன்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய நீதிபதிகள் முன்னலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

டி.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகம் தொடா்பான வழக்கை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தடுக்குமாறு கோாியே, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த மனுவை உயா் நீதிமன்றம் நிராகாித்துள்ளது.

Related posts

வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

பீடி இலைகளுடன் மூவர் கைது

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(23)