சூடான செய்திகள் 1

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO)-  பாவனைக்கு உதவாத 18 000 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தொகைகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – ஶ்ரீவிக்ரம மாவத்தை பகுதியிலுள்ள தனியார் நிறுவன களஞ்சியசாலை ஒன்றிலிருந்தே கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2 நவீன தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, களஞ்சியாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முநேடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

கருப்பின இளைஞர் கொலை சம்பவம்; அமெரிக்காவில் பதற்றம்