சூடான செய்திகள் 1

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO)- அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Related posts

மேலும் 43 பேர் பூரண குணம்

மைத்திரியின் பதவி சட்டவிரோதமானததுதான்- ஒப்புக்கொண்ட துமிந்த

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்