சூடான செய்திகள் 1

கழிவு தேயிலையுடன் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – பாரவூர்தியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 6,480 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு இந்த சோதனை இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பாரவூர்தியிலிருந்து 30 கிலோ கிராம் என்ற அளவில் பொதி செய்யப்பட்டிருந்த 216 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

கலஹா பகுதியை சேர்ந்த 35 மற்றும் 38 வயதான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் இன்றைய தினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை – ஜனாதிபதி