சூடான செய்திகள் 1

எனது சம்பளத்தை வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் -சஜித்

(UTVNEWS|COLOMBO) -ஊழல் கரை படியாத சஜித் பிரேமதாசவிற்கு இந்த அரசியல் வர்ணனை மூலம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே தன் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன். அப்படியான என்னை கூறுகின்றார். நான் மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி செய்திருக்கிறேன் என்று. அவை அனைத்தும் நம் நாட்டின் விகாரை அமைப்புக்களில் உள்ளன.

பின்னர் விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் என பொய்யாக சொல்கின்றனர்.இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்கள் கோடிக் கணக்களில் கொள்ளையிட்டு தற்போது சுகபோக வாழ்வினை வாழந்து வருகின்றனர்

Related posts

உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு

சாரதிகள், நடத்துனர்கள் மதுபாவனையில் ஈடுபடுகின்றனரா? பரிசோதிக்க நடவடிக்கை

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்