சூடான செய்திகள் 1

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – வறட்சியுடனான வானிலை நிலவுவதுடன், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக யால தேசிய பூங்கா எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள யானைகளின் கணக்கெடுப்பிற்காக அடுத்த மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அனைத்து தேசிய பூங்காக்களும் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் வழமைக்கு

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது