சூடான செய்திகள் 1

இலங்கை கனியவள ஊழியர்கள் போராட்டம்

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் முன்னிலையில், அதன் பணியாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவுசெய்த பணியாளர்கள் பலர் ஓய்வுபெற்றுள்ளதுடன், மேலும் சிலர் ஓய்வுபெறவும் உள்ளனர்.இந்த நிலையில், குறித்த பணியாளர்களுக்கு, வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு என்பன சுமார் ஒரு வருடகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயிணாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு என்பன வழங்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை

இன்று மழையுடன் கூடிய வானிலை

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர