வகைப்படுத்தப்படாத

பொலிஸ் சோதனைச் சாவடிகளை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) – காசா பகுதியில் தற்கொலை தாக்குதல்களில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பின்னேரம் பொலிஸ் சோதனைச் சாவடிகளை இலக்குவைத்து இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாடில் இருக்கும் காசாவின் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த தாக்குதலின் பின்னணியை கண்டறிவதில் பாதுகாப்பு படையினர் முன்னேற்றம் கண்டிருப்பதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் இயாத் அல் பொசொம் குறிப்பிட்டபோதும் அது தொடர்பில் அவர் விபரம் அளிக்கவில்லை.

இந்நிலையில் ஐ.எஸ் அனுதாபிகள் இந்த தற்கொலை தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் பலஸ்தீன அதிகாரிகள் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

காசாவில் பலமிக்க போராட்டக் குழுவாக ஹமாஸ் இருக்கும் நிலையில் அந்தப் பகுதியில் இவ்வாறான தாக்குதல்கள் மிக அரிதானதாக பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

India halts space mission an hour before launch

கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பூஜித்