சூடான செய்திகள் 1

ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட விசேட உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இந்த புதிய தொழிநுட்ப உபகரணம் கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ்வின் (Dr.Evgeny Usachev) தயாரிப்பாகும்.

கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ் இவ்வுபகரணத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், ரஷ்ய விஞ்ஞானி ஓல்கோ உசச்சேவா (Olgo Usacheva), இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி.மெட்டேரி (Yury B.Materiy), ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் சேனக அபேகுணவர்த்தன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தவுலாகல உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவு

editor

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு