சூடான செய்திகள் 1

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹம்பாந்தோட்டையில் இருந்து கல்முனை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மன்னார் மற்றும் காங்கேசந்துறை கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றின் வேகம் 55 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்காலிகமாக 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை காற்று வீசும் பொழுது கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன் இடியுன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், தரைப்பகுதியில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வரையில் அடிக்கடி அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

கேரளா கஞ்சாவுடன் பெண் கைது

உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்